அ'புர சூடு; இப்போதைய நிலை?

அநுராதபுர சிறைச்சாலையில் நேற்று (21) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் இன்று (22) தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலை தொடர்ந்து அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து சிறைச்சாலையில் இருந்து கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முற்பட்ட போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சத்தினால் அரசுக்கு எதிராக குறித்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டமையே இதற்கு காரணமாகும்.

நேற்று (21) இருவர் பலியானதுடன், நால்லர் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையிலேயே இன்று காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

No comments