மாவீரர் நாள் நிகழ்வு அறிவித்தல் - அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மாவீரர்நாள் நிகழ்வு பற்றிய அறிவித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வழமைபோல, இவ்வாண்டும் மாவீரர் நாள்
நிகழ்வை சிறப்பாக நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அறிவித்தலின் முழுவடிவம் வருமாறு:

மாவீரர் நாள் நிகழ்வு அறிவித்தல்

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை, எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2019ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் புதன்கிழமை (27 – 11 – 2019) அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு செய்து தமது விபரங்களைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மாவீரர் நாள் நிகழ்வில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரரின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்யவே, இவ்விபரத் திரட்டு நடைபெறுகின்றது. எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள், 20 - 11 - 2019 இற்கு முன்பதாக தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் இடங்கள்

மெல்பேர்ண்
Springvale Town Hall
397 Springvale Road Springvale VIC 3171
06.00pm - 08.00pm
Contact: 0433 002 619

சிட்னி
Newington Reserve
Holker St Silverwater
NSW 2128
06.00pm - 08.00pm
Contact: 0424 757 814

பேர்த்
Madington Community Centre
19 Alcock St Maddington
WA 609
06.00pm - 08.00pm
Contact: 0469 823 269

பிரிஸ்பன்
23 Station Avenue
Darra QLD 4076
06.00pm - 08.00pm
Contact: 0450 120 818

அடேலையிட்
77 Philip Highway
Elizabeth South SA 5112
06.00pm - 08.00pm
Contact: 0470 562 942

குறிப்பு: கான்பராவில் நடைபெறும் மாவீரர்நாள் நிகழ்வு பற்றிய அறிவித்தல் விரைவில் அறியத்தரப்படும்.

No comments