ஜனாதிபதி கதிரை:கோத்தா-சஜித் மோதல்!


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாசதான் வரவேண்டுமென்ற கோசம் வலுத்துவருகின்றது.கோத்தபாயவிற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வலு சஜித்திற்கே இருப்பதாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

மொட்டுச் சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு, ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சங்கீதக் கதிரைப் போட்டியாகவே இருக்கின்றது. ஆகவே, அக்கட்சியிலிருந்து யாரை வேட்பாளராகக் களமிறக்கினாலும், அவரைத் தோற்கடித்து வெல்லக்கூடிய ஆதரவு சஜித்துக்குத்தான் இருக்கிறதென, கிராமிய - நகர மட்டத்திலிருந்தும் கருத்து நிலவுகிறது. அதனால், சஜித் ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக இருந்தால் நல்லதென்று நானும் நினைக்கிறேன்” என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனிடையே தான் ஜனாதிபதியாகி மக்களிற்கு சேவையாற்ற தயாராக இருப்பதாக சஜித் தெரிவித்துள்ள நிலையில் கோத்தா சஜித் மோதலை அனைத்து தரப்புக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன.

No comments