5Gக்கு தடை விதிக்கவில்லையென்கிறார் ஆளுநர்!


யாழ் நகரில் 5ஜி தொலை தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்கான முயற்சிகள் கடுமையான வாதப்பிரதிவாதங்களிற்குள்ளாகியுள்ளது.ஒருபுறம் பரீட்சார்த்தமாக இத்தகைய தொலைதொடர்பு கோபுரங்களை யாழில் அமைப்பதற்கு மக்கள் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில்  இதனிடையே யாழ் நகரில் 5ஜி கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வடமாகாண ஆளுநருக்கு கடிதமொன்றை நேற்று கையளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து ஆளுநரின் அறிவுறுத்தலின்படி இதனுடன் தொடர்புடைய மாநகரசபை அதிகாரிகள் உள்ளிட்டோரை, ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆகியோர் இன்று (08) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து; ஆராய்ந்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினருடன் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கே இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே ஊடகங்களில் எதிர்வரும் 10 நாட்களுக்கு இந்த செயற்பாட்டினை நிறுத்தும்படி ஆளுநர் பணித்ததாக வந்திருந்த செய்திகளை ஆளுநர் அலுவலகம் மறுதலித்துள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளபோதும் கோபுர அமைப்பிற்கு ஏனைய கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றன.

No comments