5ஜிக்கு யாழில் தடை?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாள்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகாமையில் தனியார் ஒருவரின் வீட்டு வளாகத்தில் அமைக்கப்படும் 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்த விடயம் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்தே யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாள்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதிக்குள் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் தீர்க்கமான முடிவை வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

No comments