இனிமேல்தான் நான் இன்னும் வீரியமாக போராடுவேன்; முகிலன்

சூழலியல் போராளியை சமூக செயற்பாட்டாளர் இலயோலா மணி சந்தித்து பேசியுள்ளார். அந்த கணங்களை தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்...

தோழர் முகிலன் அவர்களை நேரில் சந்தித்து 45 நிமிடங்கள் பேசினேன்.. அவர் என்னிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது நான்(முகிலன்)கடத்தப்பட்டேன், தாக்கப்பட்டேன்,மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று கூறினார்.. பல விஷயங்களை சொல்வதற்கு முன் வந்தார் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பால் என்னிடம் எதுவோம் சொல்லவில்லை.. நான் எல்லா உண்மைகளையும் நீதிமன்றத்தில் சொல்லுவேன் என்று கண் கலங்கினார்..
இனிமேல்தான் நான் இன்னும் வீரியமாக போராடுவேன். என் மீது எவ்வளவு பொய் விமர்சனங்கள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்று தோழர் முகிலன் அவர்கள் என்னிடம் கூறினார். அவரின் தற்போதைய தோற்றத்தை கண்டு எனக்கு கண் கலங்கியது.. தோழர் அவர்களுக்கு நாய் கடித்தது உண்மைதான். கடிப்பட்ட இடத்தையும் என்னிடம் காட்டினார். வலது கண்ணின் ஓரத்தில் அடிப்பட்ட தலும்பையும் காட்டினார். இடையில் ஒரு முறை அவருக்கு மாரடைப்பு(heart attack) பிரச்சனையும் வந்துள்ளது.. மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று பேசுகிறார். மிகவும் கவலையாக உள்ளது.தோழர் அவர்களை நேரில் பார்த்த அந்த நொடியில் அவரின் தோற்றத்தை கண்டு என்னை அறியாமல் எனக்கு கண்ணீர் வந்தது... என விவரித்துள்ளார்.

No comments