அகதிகள் நெருக்கடியை தீர்க்க பிரான்ஸ் புது முயற்சி!
மேலும், பரிஸில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பிரான்கோ- ஜேர்மன் திட்டத்தின் அடிப்படையில் குடியேற்றவாசிகளை பகிர்ந்து கொள்ளும் திட்டத்திற்கு 6 நாடுகள் ஒத்தாசை வழங்க சம்மதித்துள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுமையைப் பகிர்ந்து கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பு நிதியை வழங்குவதற்கு தான் இணங்கப்போவதில்லை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில், பிரான்ஸ், ஜேர்மனி, பின்லாந்து, அயர்லாந்து, லிதுவேனியா உள்ளிட்ட 8 நாடுகள் குடியேற்றவாசிகளுக்கு வாழ்விடம் வழங்க தயாராகி வருகின்றன.
இந்நிலையில் குடியேற்றவாசிகளில் பெரும்பாலானோர் முதலாவதாக உள்நுழைகின்ற ஐரோப்பிய நாடான இத்தாலி குறித்த திட்டத்திற்கு உடன்பட மறுத்துள்ளது.
இத்தாலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மத்தியோ சல்வினி குடியேற்றவாசிகள் தொடர்பாக மேற்கொண்டிருக்கும் கடுமையான நிலைப்பாட்டினையடுத்தே இத்தாலி குறித்த உடன்பாடு தொடர்ன பேச்சுக்களை முறித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment