கன்னியா பௌத்த பேரினவாதிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை தளர்த்த உதவும் சில தமிழ் நாதாரிகள்- தமிழ் ஒருவன்

பௌத்த பேரினவாதிகளின் தமிழரின் கன்னியாவில் அட்டகாசங்களை அடக்க நீதிமன்றம் மூலம் சில தடையுத்தரவுகள் தமிழருக்கு சாதகமான சில காணப்படுகின்றது.
ஆனால் இவற்றை மெல்ல மெல்ல தளர்த்த தமிழரில் ஒரு சிலர் துணை செல்கின்றார்கள்,

நேற்று நடைபெற்ற கன்னியா தொடர்பன கலந்துரையாடலில் காணி உரிமையாளர் ஆகிய திருமதி.கோகிலரமணி அம்மா கூறுவதாவது, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. இது சம்மந்தமான வழக்கு வெற்றிகரமான இடைக்கால தடையுடன் உயர் நீதிமன்றத்தில் இருப்பதால் இது சம்மந்தமான கூட்டம் அவசியம் இல்லை மற்றும் இது நீதிமன்ற கட்டளையை மீறும் செயலும் ஆகும்.
அடிப்படையிலேயே இப்பிள்ளையார் கோவிலுக்கு மறைமுகமாக எதிர்பைக்காட்டியும் தொல்பொருள் திணைக்களத்திற்க்கு ஆதரவாகவும் செயல்படுத்திவரும் கன்னியா சிவன் ஆலய நிர்வாகம் என பறைசற்றிக்கொள்ளும் ஒரு குழுவினர் நேற்று நடைபெற்ற கூட்டத்தில்(கீழ் கண்ட படத்தில் கலந்துகொண்டோரின் பெயர்கள் குறிப்படபட்டுள்ளது.) தங்கள் சுயநலமான முடிவினால் இன்று காலை பிள்ளையார் இருந்த இடத்தை சுற்றி பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும் நீதிமன்ற கட்டளையை மீறி அவ் இடத்தில் பூசை செய்துள்ளனர்.

உதவிகள் செய்யாவிட்டாலும் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக பிள்ளையார் ஆலயத்தைக் காட்டிக் குடுக்க வேண்டாம். பகுத்தறிவான மக்கள் சிந்தித்து செயல்படவும்.

No comments