தமிழர் தாயக புதைகுழிகளெல்லாம் வெள்ளைக்காரன் காலத்தினதே!


ஜநாவில் மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பிரித்தானியக் காலனித்துவத்தின் கீழ் இலங்கை காணப்பட்டிருந்த குறித்த புதைகுழிகள் போல இனிவரும் காலத்திலும் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால், அதனை வேறுவிதமாகச் சித்திரிக்க முடிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் மன்னார் மனிதப் புதைக்குழியில் தொடர்ந்து அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதா அல்லது பூரணமாக இதனை நிறுத்துவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை (22) எடுக்கப்படவுள்ளது.

மன்னார் நீதவான் டீ.சரவணராஜா தலைமையில், இந்த தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல், நாளை இடம்பெறவுள்ளதாக, அகழ்வுப்பணிகளை மேற்கொண்டுவந்த விசேட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடல், மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments