அரசியல் கனவு இல்லையென்கிறார் சுரேன்?

மனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை என வடமாகாண   ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதிநிதிகள் குழுவின் ஓர் அங்கமாக ஜெனிவா சென்றுள்ள அவர்,  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கின் ஆளுநராக தான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் எனவும் அவர்  கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு எந்த அளவிற்கு சேவை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு தான் சேவை செய்ய தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும்  , நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை எனவும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன்  இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments