1.49 பில்லின் யூரோக்கள் அபராதம் - ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி அறிவிப்பு

கூகுள் நிறுவனத்துக்கு நேற்று  ஐரோப்பிய ஒன்றியம் ஆணையாளர்  1.7 பில்லியன் அமொிக்க டொலர்களை (1.49 பில்லியன் யூரோக்கள்) அபராதம் விதிப்பதாக அறிவித்துள்ளது. ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆன்-லைன் வர்த்தக சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது.

கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.

கூகுள் முதலில் தனது போட்டியாளர்களின் இணையதளங்களில் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது.

பின்னர் அவர்களிடம் கூகுளில் குறைந்த எண்ணிக்கையில் விளம்பரங்கள் வெளியிட மிகவும் இலாபகரமான இடம் ஒதுக்குவதற்கு முன்பதிவு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.

தனது போட்டி இணையதளங்களில் ஏதாவது தேடு விளம்பரங்கள் வெளியானால், மாற்றம் செய்வதற்கு முன்பு கூகுளிடம் எழுத்து மூலம் அனுமதி பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

என  ஐரோப்பிய யூனியன் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments