புஸ்வாணமானது வழக்குகள்?: கலைப்பு சரியானதென தீர்ப்பு வருமா?!


நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக,உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், 2 ஆவது நாளாகவும் இன்று (13), காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில், எதிர்தரப்பு மற்றும் அரச தரப்பு வாதப் பிரதிவாதங்கள் நிறைவுப் பெற்றிருப்பதாக அறியமுடிகிறது.
இந்நிலையில், மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்படுகின்றனவா அல்லது தீர்ப்பு இன்றைய தினம் கிடைக்கிறதா? என்பது குறித்து 5 மணிக்குப் பின்னர் தெரியவருமென, கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னைய செய்தி...........
நாடாராளுமன்றத்தை கலைப்பதற்கான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளை “சட்டபூர்வமானது “ என சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது

இதனிடையே முன்னதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறும் சட்டமா அதிபர்  ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் இன்று கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்றத்தை  ஜனாதிபதி கலைத்தமையானது அரசமைப்பை மீறும் நடவடிக்கையென தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றில் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

No comments