புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதல்களின் பின்னணியில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதல்களின் பின்னணியில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை என்று அனைத்துபீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்னமேனன் தெரிவித்துள்ளார்

யாழில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

மாணவர்களின் மோதலின் பின்னணியில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை என்று அவர் தெரிவித்தார்

தேர்தல் காலம் என்பதால் மாணவர்களின் மோதலை அரசியலாக சிலர் திசைதிருப்ப முயல்வதாகவும் , மோதல் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை செய்வதாகவும் , தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான தாக்குதலின் பின்னர் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முகப்பு
Selva Zug 2