செவ்வாய், 25 ஏப்ரல் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance
may-1st

முன்கூட்டிய தேர்தலுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவர் வரவேற்பு!

பிரதமர் தெரேசா மே-யின் முன்கூட்டிய தேர்தல் குறித்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இந்த தீர்மானம் பிரெக்சிற் பேச்சுவார்த்தையை மேலும் உறுதிபடுத்தும் வகையில் அமையும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவர் அன்ரோனியோ தஜானி தெரிவித்துள்ளார்.bre-

பிரித்தானியா டவுனிங் வீதியில் அமைந்துள்ள பத்தாம் இலக்க இல்லத்தில் பிரதமர் தெரேசா மே-உடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “பிரெக்சிற் தொடர்பில் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் புதிய அரசாங்கத்தை உருவாக்குவது என்பது பிரித்தானியாவிற்கு மாத்திரமின்றி எமக்கும் நன்மையளிப்பதாகவே கருதுகிறோம்.my therasa bre

இரண்டு ஆண்டுகள் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இடைநடுவில் பிரதமர், அமைச்சர்கள் மாற்றப்படுவதை தவிர்த்து, தொடர்ந்தும் ஒரே பேரப் பேச்சாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்ததாகும்.

நாம் பிரெக்சிற்றை செயல்படுத்த பணியாற்றி வருகின்றோம். அந்தவகையில் இச்செயற்பாட்டை நடைமுறைப்படுத்த ஒரே அரசாங்கத்துடன் பணியாற்றுவது நல்லது” என்றும் குறிப்பிட்டார்

முகப்பு
Selva Zug 2