சர்வதேச விசாரணை தேவையென்கிறார் சுமந்திரன்!



உள்ளுர் பொறிமுறையால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணை முடிவடைந்து விட்டதக இதுவரை காலமும் கூறி வந்திருந்த  எம்.சு.சுமந்திரன் மே மாதத்துடன் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு, உடலகம ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு போன்ற பல ஆணைக்குழுக்கள் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டன.

ஆனால் ஆணைக்குழுக்களாலும் அவற்றின் அறிக்கைகளாலும் ஏதும் நடந்திருக்கவில்லை.

ஒரு உள்ளகப் பொறிமுறை மூலமாக அவர்கள் சொல்லும் குறைபாடுகளுக்கு அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குச் சரியான நீதி கிடைக்காது என்பதற்கு இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது.

இன்னுமொரு செயலணியை அமைத்துச் செப்டெம்பரில் வரவுள்ள ஜெனிவா அமர்வுக்குக் காண்பிக்கும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக இதனைக் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.

எவ்வாறாயினும் உள்ளூர் பொறிமுறையில் நீதி கிடைக்கமாட்டாது. எந்த நீதி விசாரணையாக இருந்தாலும் அது சுயாதீன விசாரணையாக இருக்க வேண்டும்.

ஒரு சுயாதீன விசாரணையாக இருந்தால் இந்தச் சந்தர்ப்பத்தில் அது சர்வதேச விசாரணையாக மட்டுமே இருக்க முடியும். காரணம் போரிட்ட இரண்டு தரப்பில் ஒரு தரப்பு அரச தரப்பே.


ஆகவே, அந்த ஒரு தரப்பில் போரிட்ட தரப்பினரே விசாரணை நடத்துவது அது விசாரணையே அல்ல. சுயாதீன விசாரணையாக இருந்தால் அது சர்வதேச விசாரணையாக மட்டுமே இருக்கும் என்று நாங்கள் 2009ஆம் ஆண்டு காலத்தில் இருந்தே திரும்பத் திரும்பக் கூறி வந்துள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை 2015 நவம்பரில் வெளியிடப்பட்டது.

அதுவொரு சர்வதேச விசாரணை அறிக்கை. அதனைத் தொடர்ந்து நீதிமன்றப் பொறிமுறை வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். அது செய்யப்படவில்லை.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை நடந்துள்ளது.

ஆனால், சர்வதேச நீதிமன்றப் பொறிமுறை ரோம் சட்டத்தின் மூலம் மட்டுமே நடத்தப்படும். எனவே, இலங்கை அரசு ரோம் சட்டத்துக்கு இணங்க வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்;.


No comments