தமிழ் பினாமிகளது மதுபானச்சாலைகளும் மூடப்படும்!



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு மதுபான உரிம பத்திரங்களை ரணில் அரசு வடகிழக்கிற்கு அள்ளிவீசிவருகின்ற நிலையில் அவற்றினை பினாமிகள் பேரில் வாங்கிக்கொண்ட தமிழ் அரசியவாதிகள் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மதுபானச்சாலைகளிற்கு அனுமதி வழங்கும் நடைமுறையை நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆண்டு இறுதிக்குள் மக்கள் ஆசிர்வாதத்துடன் தான் ஆட்சிக்கு வந்தால் உரிமங்கள் வழங்குவத கட்டாயம் நிறுத்தப்படும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும்.

ஊரிமங்கள் தொடர்பாக நீதிமன்றங்களை நாடினால், நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக உரிமங்களை தடை செய்வோம்.

மதுபான அனுமதிப்பத்திரத்துடன் கூடிய உணவகம் தொடர்பில் தான் முன்னர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

அது குறித்து மீண்டும் கேள்வி எழுப்புவது குறித்து கவலை தெரிவிக்கிறேன் எனவும் சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிளிநொச்சியினுள் மட்டும் கடந்த ஒரு மாதத்தினுள் ஆறு மதுபானச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments