அம்மணிக்கும் சிறையில் பயம்!
தென்னிலங்கையை கைது பயம் மிரட்டிவரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரான சிராந்தி ராஜபக்ச, நீதிமன்றில் முன் பிணை கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று நாடு திரும்பியதும், விமான நிலையத்தில் வைத்து தாம் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவித்தே அவர் மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.
நீதிமன்றம் விதிக்கும் எவ்வித நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தமக்கு முன் பிணை வழங்குமாறு அவர் கோரியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியே இம்மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
முன்னதாக தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைக்காகக் கடந்த மாதம் 16 ஆம் திகதி சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
அவரது தலைமையில் இயங்கிய அமைப்பின் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான தீவிர விசாரணைகளுக்காக, கடந்த 24 ஆம் திகதி நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment