மனநலப் பரிசோதனை வேண்டும்?
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு போதைப்பொருள் பரிசோதனை மற்றும் மனநலப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, பொதுமக்கள் தரப்பிலிருந்தும் சிவில் அமைப்புக்கள் தரப்பிலிருந்தும் சபாநாயகருக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, நாடாளுமன்ற அமர்வுகளின்போது அவர் வெளியிடும் கருத்துகள், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான முரண்பாடுகள் மற்றும் சபை நடவடிக்கைகளின்போது அவரது அணுகுமுறை ஆகியவை சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.
அத்தகைய பின்னணியில், தற்போது பொதுமக்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பரிசோதனைக்கான கோரிக்கை மேலும் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு அல்லது மனநலப் பாதிப்பு தொடர்பில் பொதுமக்களின் கோரிக்கையை சபாநாயகர் பதில் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment