மனோ: மதுபோதையில் கைது!
மது போதையினில் விபத்தினை ஏற்படுத்தியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நவம்பர் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை இரவு, மனோ கணேசன் எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார்.
அன்றைய இரவு மனோ கணேசன் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஓட்டிச் சென்ற வாகனம் மற்றொரு ஜீப் வண்டியோடு மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டுப் போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு நகர போக்குவரத்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்படடிருந்தார்.
விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட இரண்டு வாகனங்களிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Post a Comment