அனுமதி பெற்று விளக்கேற்ற பணிப்பு!



போரில் உயிரிழந்த தமது உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கும், தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பை முன்னிலைப்படுத்துவதற்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் வடக்கு மூன்றாம் நிலை தலைவர்கள் விளக்கமளிக்க தொடங்கியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியினர் தம்மிடையே புத்திஜீவியென சொல்லிக்கொள்ளும் கபிலன் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், இலச்சினைகள், சின்னங்கள், சீருடைகள், ஆயுதங்கள் மற்றும் அவற்றை முன்னிலைப்படுத்தும் காட்சிப்படுத்தல்களைத் தவிர்ப்பது அவசியமாகும்.

அதேவேளை, போரில் உயிரிழந்த தமது உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது தனித்துவமான மனிதநேயச் செயற்பாடாகும். இத்தகைய அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.

எனவே, சட்ட ஆலோசனைகளைப் பெற்று, நடைமுறையிலுள்ள சட்டங்களையும் அவற்றின் வரம்புகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டு, எவ்விதமான சட்டச் சிக்கல்களுக்கும் இடமளிக்காமல் கண்ணியமான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்போம்.

உயிரிழந்தவர்களை நினைவுகூருவது மனிதநேயத்துடனும் மனித உரிமைகளுடனும் தொடர்புடையது. நினைவுகூரும் உரிமையை மதிப்பதும், சட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்கமைவாகச் செயற்படுவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும். நினைவேந்தல் என்பது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மனித உணர்வும் உறவுகளின் நினைவுகளும் சார்ந்த விடயமாகுமென புலி நீக்க அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார்.


No comments