தீபாவளிக்கு புதிய வெடிகள்!
தேசிய மக்கள் சக்தியின் வெடிகள் நமுத்து வரும் நிலையில் இன்றைய தீபாவளிக்கு புதிய வெடிகள் களமிறக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மண்டதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பான சுற்றுச்சூழல் அறிக்கைகள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, இத்திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் அணியினரும்(?) இணைந்து கலந்துகொண்ட கள ஆய்வின் பின்னர் தமது ஆதரவாளர்களிடையே கருத்து வெளியிடுகையில் முன்வைத்த செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடமாட்டோமெனவும் தெரிவித்துள்ளார்.
யார் என்ன சொன்னாலும், எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், யாழ்ப்பாண மக்களின் அபிவிருத்திப் பயணம் ஒருபோதும் தடைப்படாது. அரசியல் நோக்கங்களுக்காக அல்ல் மக்களின் எதிர்காலத்திற்காகவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதற்காகவும் எமது பணிகள் தொடரும்.மக்கள் எந்தவிதத்திலும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை - யாழ். மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் என்பவரும் கருத்து வெளியிட்டுள்ளார்.
பெரும் பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மண்டைதீவு சர்வதேச விளையாட்டரங்க திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுகள் இன்மையினை காரணங்காட்டி கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment