கறுப்பு தீபாவளி வலி.வடக்கில்!



வலிகாமம்  வடக்கில் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் தொடர்கையில் இன்றைய தீபாவளியை கறுப்பு தீபாவளியாக மக்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே மக்கள் போராட்டம் 29 ஆவது வாரமாக 'கொமாண்டோ பங்களா' முன்பாக தொடர்கின்றது.

 வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக  கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

தமது சொந்த நிலங்கள் மீள ஒப்படைக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாகத் தீர்மானித்துள்ள மக்கள், அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அப்பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை இன்றும் உயர் பாதுகாப்பு வலயங்களாகவே தொடர்கின்றன.

 பல வருடங்களாகத் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி மக்கள் பல்வேறு வடிவங்களில் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இதுவரை காணிகள் விடுவிக்கப்படாத நிலையிலேயே இத்தொடர் போராட்டம் தற்போது 29 ஆவது வாரத்தை எட்டியுள்ளது.


No comments