ஆதிலிங்கேஸ்வரருக்கு பிக்குகள் பூசை வழிபாடு!



பெருமெடுப்பிலான விசேட அதிரடிப்படையினர் சூழ சாந்த போதிதேரர் தலைமையிலான பிக்குகளடங்கிய குழு ஆதிலிங்கேஸ்வரர் உச்சிமலையில் ஒன்றரை மணிநேரம் பூசை வழிபாடுகளை நடாத்தியுள்ளது.

அத்துடன் இது தமது புண்ணிய பூமி எனவும் ஆலய பூசகர் நிர்வாகத்தினருடன் முரண்பட்டு உச்சிமலையில் உள்ள சூலத்தை அகற்றுமாறு கோரியதுடன் விரைவில் இவ்விடத்தில் விகாரை ஒன்று கட்டப்படுமென தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்கள்.

வெடுக்கு நாரி மலையில் சைவ வழிபாட்டை அச்சுறுத்தி உச்சிமலையில் தமது வழிபாட்டை சட்டவிரோதமாக மேற்கொள்ள வருகைதந்த கல்கமுவ சாந்த போதிதேரருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் பாதுகாப்பளிக்க பத்துக்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து நூற்று ஐம்பது வரையான பொலிசாரும் ஐம்பதுக்கு மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பை வழங்க உச்சிமலையில் ஆதிலிங்கேஸ்வரருக்கு அருகில்  வட்ட வடிவமாக தாமரைப்பூவினை அடுக்கி சில பொருட்களைப்பரப்பி ஒன்றரை மணிநேரம் பிரித் ஓதியிருந்தனர்.

இதனிடையே வெடுக்கு நாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் பூசை வழிபாட்டில் இடம்பெறும் இடையூறுகளை தடுக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களோடு அங்கு சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.


No comments