அருச்சுனாவிற்கு தமிழீழம் வேண்டாமாம்!
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னராக தமிழ் மக்கள் முட்டாள்களை தமது தலைவர்களாக நம்பி ஏமாறுவது தொடர்கதையாகியுள்ளது.
அவ்வகையில் யாழ்.மாவட்ட வாக்களர்கள் தெரிவு செய்த முட்டாள் ஒன்று தமிழ் ஈழம் என்பதே எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் வேண்டுமென திருவாய் மலர்ந்துள்ளது.
மகிந்த பரம்பரையின் மொட்டுகட்சிக்கு உயிரூட்ட கூட்டப்பட்ட அனுராதபுர கூட்டத்தில் நாமல் தான் அடுத்த ஜனாதிபதி பந்தயம் கட்ட நான் ரெடியெனவும் சபதம் விடுத்துள்ளது அர்ச்சுனா என்ற முட்டாள்.
கூட்ட மேடையிலேறி நாமல் மச்சான் நீ தான் 2029 இன் ஜனாதிபதி என தெரிவித்த அர்ச்சுனா பிதற்றிய விடயங்கள் சிங்கள ஊடகங்களில் பேசுபெர்ருளாகியுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உரையாற்றும்போது கூட்டத்தில் உரையாற்றாமலே மகிந்த ராஜபக்ச வெளியேறியிருந்தார்.
கைது அச்சத்தில் மகிந்த குடும்பம் அல்லாடி வரும் நிலையில் மேடையில் அருச்சுனா தமிழ் ஈழம் என்பதே எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் வேண்டுமென திருவாய் மலர்ந்துள்ளமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Post a Comment