இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்:சீனா வேண்டாம்!
இலங்கை அரசு சீன அரசு சார்பு நிலைப்பாட்டை எடுத்துவருவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
38 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் வியாழக்கிழமை 10ஆம் திகதி வரை இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ராஜ்நாத் சிங் கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் தொடர்பாக பேசப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Post a Comment