அரசுகள் கைவிட்டுவிட்டன:சவேந்திர சில்வா!



அடுத்தடுத்து வந்த ஆட்சிக்கு வந்திருந்த அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இலங்கை இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என விளக்கமளித்துள்ளார் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா .

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.. 

இதனிடையே தன்மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ள  சவேந்திர சில்வா , தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுற்ற சவேந்திரசில்வா தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments