தமிழரசின் இரங்கல்!



அமரத்துவம் அடைந்த எம் கே. சிவாஜிலிங்கம் அவர்களது மறைவு குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம். அரை நூற்றாண்டு காலமாக தமிழ் தேசிய கோட்பாட்டோடு நெருங்கிப் பயணித்தவர் திரு. சிவாஜிலிங்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக கடமையாற்றியவர். 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பேராளராக வட்டுக்கோட்டை மாநாட்டில் கலந்து கொண்ட திரு. சிவாஜிலிங்கம் இறுதி வரை தனது கொள்கையில் உறுதியாக இருந்த ஒருவர் என இலங்கை தமிழரக்கட்சியின் பதில் தலைவர் மற்றும் செயலர்கள் ஒப்பமிட்ட இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments