விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்பு!



கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளுக்கு பிணை வழங்குவது தொடர்பான வாதங்களை முன்வைப்பதற்காக, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அநுராதபுரம் பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்.

மனுத் தாக்கல்: விளக்கமறியலில் உள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், கஹடகஸ்திகிலிய விஜித தேரர், பலங்கொட அனுருத்த தேரர், பிலிமத்தலாவ ரேவத்த தேரர் மற்றும் தெனியாய சோரத தேரர் ஆகிய ஐந்து பிக்குகள் சார்பாக சட்டத்தரணி  இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய விகாரைக்கு அருகிலுள்ள தானசாலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குள் பலருடன் இணைந்து அத்துமீறி நுழைந்தமை, அமைதியற்ற முறையில் நடந்துகொண்டமை மற்றும் சாசனத்திலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரத்ன என்பவர் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.


No comments