கடத்தப்பட்ட 46 பள்ளிக்குழந்தைகளை நைஜீரிய இராணுவம் மீட்டது


இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 46 குழந்தைகளை நைஜீரிய ராணுவம் மீட்டதாக அந்நாட்டு அரசு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஓயோ மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஓரிரே நகரிலுள்ள மூன்று பள்ளிகளில் இந்தக் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

எசியேலே மற்றும் யவோட்டா ஆகிய விவசாய சமூகங்களில் உள்ள பள்ளிகள் மீதான சோதனையானது ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து. போராட்டங்களையும் ஒரு மாத கால மாநில அளவிலான ஆசிரியர் வேலைநிறுத்தத்தையும் தூண்டியது.

இராணுவம், காவல்துறை மற்றும் உளவுத்துறை இணைந்து நடத்திய நடவடிக்கையில், இந்தக் கொடூரச் செயலைச் செய்த சில பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு, அவர்களில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஓயோ மாநிலம், ஓக்போமோசோவில் உள்ள ஓரிரே பகுதியிலிருந்து கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நமது பாதுகாப்புப் படைகள் இன்று வெற்றிகரமாக மீட்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஜனாதிபதி போலா தினுபு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

No comments