வடக்கில் தண்டமாக ஆயிரக்கணக்கில்!
வட மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போதைய தேவைப்பாட்டை விடக் கூடுதல் எண்ணிக்கையில் (மேலதிகமாக) அரசாங்க உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்களுள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே மிகக் கூடிய எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் உள்ளதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ சந்தன அபேரத்ன அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், வெளிமாவட்டங்களில் பதிலீடின்றிக் நீண்டகாலமாகப் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் குறித்து எழுப்பிய கேள்விக்கு முறையான பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தத் தரவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
மாவட்ட ரீதியாக உள்ள மேலதிக அரச ஊழியர்களின் விபரம்:
அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, வட மாகாணத்தின் மாவட்டங்களில் தேவைக்கு அதிகமாகப் பணிபுரியும் ஊழியர்களின் விபரம் பின்வருமாறு:
யாழ்ப்பாணம் - 852 பேர்
கிளிநொச்சி - 174 பேர்
முல்லைத்தீவு90 பேர்
மன்னார்- 59 பேர்
வவுனியா- 54 பேர்
🔄 வருடாந்த இடமாற்றங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்:

Post a Comment