சஜித்திடமும் பாதாள உலகப்பணம்!



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு கோடி கொடுக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுவரை காலமும் பொதுஜன பெரமுன தான் பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் நபர்களுடன் தொடர்புக் கொண்டு முன்னிலையில் இருந்தது, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது அந்த கட்சியை பின்தள்ளியுள்ளது.

நாட்டில் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான போராட்டத்தை, எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் எமது அரசாங்கம் பின்வாங்காது எனவும் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த மாதம் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமிந்த குலரத்ன என்பவரை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.

அந்த நியமனம் தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கும், அது குறித்த மேலதிக தகவல்களைப் பெறுவதற்கும் சஜித் அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய அனுர அரசாங்கத்தின் கீழ் சமிந்த குலரத்ன சேவை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


No comments