கோத்தா எடுபிடிக்கு சிக்கல்?



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச்வின் தனிச்செயலாளர் சுஜீஸ்வர லெனின் பண்டாரவை மௌனிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பமாகியுள்ளது. சுஜீஸ்வர லெனின் பண்டாரவை எதிர்வரும் ஜூலை 22-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே தடுத்து வைப்பிற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான சுஜீஸ்வர லெனின் பண்டாரவின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான், அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சுஜீஸ்வர லெனின் பண்டார கடந்த ஜூன் 18-ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சுஜீஸ்வர லெனின் பண்டாரவை நீதிமன்றிற்கு அழைத்து வந்த பேர்து வாய் திறக்க வேண்டாமென நபர் ஒருவர் விடுத்த எச்சரிக்கை கவனத்தை பெற்றுள்ளது. 


No comments