நீதி தேவதைக்கு நாலாம் மாடி விசாரணையா?



செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முறையான விசாரணைகளை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 “செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவருக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.  கைதிக்கு ‘பொதுமன்னிப்பு’ வழங்குவதாகவும், புதைகுழி தொடர்பான எந்தவொரு விடயத்தையும் வெளியே கூற வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது”.

எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மைகளை மூடிமறைக்க நடந்த முயற்சிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா இரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள  புதைகுழியானது, 1996-ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதயாக கடமையிலிருந்த காலப்பகுதியில் தோற்றம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments