ஆமிக்கு காணியில்லை!

 


கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி. பிரதேசத்தில் இராணுவ தேவைக்கு பொது மக்களுக்கு சொந்தமான எந்த காணிகளும் சுவிகரிக்க அனுமதிக்க போவதில்லை என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்,  சுப்பிரமணியம் சுரேன்  தெரிவித்துள்ளார்  

இக் கூட்டத்தின் போது பச்சிலைப்பள்ளி முகாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள 25.73:ஏக்கர் தனியார்  காணியினை  4வது  மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணிக்காக சுவிகரிப்பதற்காகவும்  இயக்கச்சி  எரிபொருள் நிலையத்துக்கு அருகில் உள்ள 12 ஏக்கர் தனியார்  காணியினை 5th Engineer Service Regiment இராணுவ முகாம் அமைந்துள்ள குறித்த  காணியினை சுவிரிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன 

இந்த கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பச்சிலை பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்,  சுப்பிரமணியம்  சுரேன் இராணுவ தேவைக்காக இந்த காணிகளை சுவிகரிக்க  முடியாது இது முழுக்க முழுக்க பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் குறிப்பாக எரிபொருள் நிலையத்துக்கு பக்கத்தில் உள்ள காணி உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதனால் தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் உள்ளார்.   

 ஏற்கனவே இந்த இரு காணிகளும் நில அளவை செய்ய முயற்சித்த போதும் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்த காணிகளை இராணுவ தேவைகளுக்கு வழங்க முடியாது அந்த காணி உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து இருக்கிறார்கள் எனவே அந்த காணிகளை உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

No comments