பலாலியில் போராட்டம்


உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பலாலி சந்தியில் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலங்களை மீள வழங்குமாறு வலியுறுத்தினர்.

அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெய்யிலில் இருந்து தம்மை பாதுகாக்க அப்பகுதியில் தற்காலிக கொட்டகை அமைக்க முற்பட்ட போது பலாலி பொலிஸார் அதற்கு தடைவிதித்ததுடன், வடக்கில் கொட்டகை அமைத்து போராடினால் தெற்கிலும் கொட்டகை அமைத்து போராடுவார்கள் என்பதால் கொட்டகை அமைக்க அனுமதிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.





No comments