மருதங்கேணியில் 28 ஏக்கர் காணியை காணி சுவீகரிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 11.2657 ஹெக்டயர் காணியைகாணி சுவீகரிக்க நில அளவை திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அது குறித்து நிலஅளவை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில்
மருதங்கேணி பிரதேச செயலாளரின் 21-05-2026 திகதியிடப்பட்ட நிலஅளவை கோரிக்கை இலக்கம் VE/SR/2026/27 இற்கும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரின் வர்த்தகமாணி குறிப்பு இல. 4-3/4/2012/D/351 இற்கும் அமைவாக மருதங்கேணி (ஜே/428) கிராம அலுவலர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் "தேவதுரவு" என்று அழைக்கப்படும் 11.2657 ஹெக்டயர் விஸ்தீரணம் உடைய காணியினை ஒரு பகிரங்கத் தேவைக்கு வேண்டியதாய் இருப்பதால் சுவட்டு வரைபடம் Ya/VDE/2016/36 இற்கு அமைவாக காணிசுவீகரிப்பு பிரிவு 5 அடிப்படையில் 2026-07-09 இருந்து தொடர்ந்து தினமும் (வேலைநாட்களில்) காலை 9 மணியில் இருந்து மாலை வரை நிலஅளவை செய்யப்படும் என்பதை அறியத்தருகிறேன்.
உரிமை கோரும் வேறு யாராவது இருப்பின் காணி தொடர்பான ஆவணங்களுடன் குறிப்பிட்ட நாளில் வருகைதந்து எல்லைகளை காண்பித்து நிலஅளவைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் - என்றுள்ளது.

Post a Comment