கரும்புலிகளின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு


கரும்புலிகள் தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரும்புலிகளான கப்டன் மில்லர் மற்றும் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டது. 

தமிழர் விடுதலைப் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை  தியாகம் செய்த கரும்புலி கப்டன் மில்லர் அவர்களது தாயார் மற்றும் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அவர்களது  தாயார் ஆகியோரை கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவனால்  பொன்னாடை போத்தி  மதிப்பளிக்கப்பட்டுள்ளனர் 

 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நெல்லியடி பகுதியில் உள்ள இராணுவ முகாம் மீது கரும்புலி தாக்குதலை கப்டன் மில்லர் மேற்கொண்டார். 

காங்கோசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்ற கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் கடற்கரும்புலி  அங்கயற்கண்ணி 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி தாக்குதலை மேற்கொண்டார்.






No comments