இஸ்ரேல், லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது
அமெரிக்க அதிபர் டிரம்ப், லெபனான் அதிபர் அவுன் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதைத் தொடர்ந்து தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்துவதைப் பொறுத்தே போர் நிறுத்தத்திற்கான தங்களின் உறுதிப்பாடு அமையும் என்று ஹிஸ்புல்லா கூறுகிறது.
மத்திய கிழக்கில் போரை இடைநிறுத்துவதற்காக, தெஹ்ரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே முன்னதாக ஏற்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான் இந்த போர் நிறுத்தம் என்று குறிப்பிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட இந்த போர் நிறுத்தத்தை வரவேற்றது.
, லெபனானில் போர் நிறுத்தம் என்பது பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏற்பட்ட போர் நிறுத்தப் புரிதலின் ஒரு பகுதியாகும் என்று செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி குறிப்பிட்டார்.
இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு வெடித்ததாக ஏஎஃப்பி செய்தியாளர்களும், ஏஎஃப்பிடிவியின் காணொளிக் காட்சிகளும் தெரிவிக்கின்றன.

Post a Comment