விஜய் கூடவே உள்ளுர் பிரபலங்கள்!



ஈழத்தமிழர் அரசியல் தீர்வுக்காக ஸ்டாலினை தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் தமிழ்த் தேசியப் பேரவை பேச்சு நடாத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் தீர்வுகள் தொடர்பாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு ஒன்று இன்று (03.07.2026) சென்னை, தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பேரவையின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட  பிரதிநிதிக்குழு, ஈழத்தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு மற்றும் வாழ்வுரிமை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விரிவான எழுத்துமூல மனுவை முதலமைச்சரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பின் போது, இந்தியா–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் எல்லைத்தாண்டிய மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணுதல் மற்றும் தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் குடியுரிமை உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தக் குழுவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவர் சட்டத்தரணி கே.வி. தவராசா, பங்கெடுத்திருந்தனர்.

இவர்களுடன் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களும் இச்சந்திப்பில் உடனிருந்ததாக தெரியவருகின்றது.


No comments