11வது வெள்ளி போராட்டம்!



யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதி மக்கள், தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி இன்று(3) மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் காரணமாக 36 ஆண்டுகளுக்கு முன்னர் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், 36 ஆண்டுகள் கடந்தும் அவை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அதனால், தங்களது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவித்து உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணி விடுவிப்பை வலியுறுத்தி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று 11வது வாரத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments