குழப்பத்தில் தையிட்டி விவகாரம்!

 


தையிட்டி காணிகள் விவகாரத்தில் தமிழ் தரப்புக்களிடையே குழப்ப நிலை தோன்றியுள்ளது.

இதனிடையெ காணிகளை விடுவிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாகத் தெரியவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாள்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று இடம்பெற்ற 'தையிட்டி: அடுத்து என்ன?’’ எனும் தலைப்பில் தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்

அண்மையில் வருகை தந்திருந்த ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தையிட்டி விகாரைப் பிரச்சினை தொடர்பாகவும் எங்களோடு கலந்துரையாடி இருந்தார். அந்த விகாரைப் பிரச்சினை தொடர்பாக தாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறார்கள் எனவும் எங்களிடம் தெரிவித்திருந்தார். தையிட்டி விவாகாரம் தொடர்பில் உலக நாடுகளால் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவருகிறது.

மக்களுக்கு காணிகளை விடுவிப்பதற்காகவே இந்த அரசாங்கம் காணிகளை அளவீடு செய்கின்றது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

குருந்தூர் மலையிலும் அகழ்வு பணிகளை மாத்திரமே செய்வோம், எதுவிதகட்டுமானப் பணிகளும் இடம்பெறாது என அப்போதைய புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

ஆனால் தற்போது ஒரு விகாரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.

இப்படி தையிட்டி பகுதிலும் பிரச்சினை கைமீறிப் போன பின்னர் எதிர்ப்புக் காட்டி எதுவித பலனும் இல்லையெனவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments