அமெரிக்கப் பேச்சுவார்த்தைக் குழுவினரும் பாகிஸ்தான் வந்தடைந்தனர்


ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகனும் சிறப்பு ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வந்துள்ளார்.

இதற்கிடையில், சமீபத்தில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகராக உருவெடுத்துள்ள ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக நள்ளிரவில் வந்தடைந்தனர்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் இரு தரப்பினரையும் வரவேற்றனர். போரிட்டு வரும் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய மத்தியஸ்தராக விளங்கும் அந்நாடு, நிலையற்ற இரண்டு வார கால போர் நிறுத்தத்தை உறுதி செய்வதிலும் பங்கு வகித்தது.

No comments