ஈரான் குழுவுக்குத் தலைமை தாக்குகிறார் முகமது பாகர் காலிபாஃப்


முகமது பாகர் காலிபாஃப், இராணுவப் பின்னணியைக் கொண்ட ஒரு பழமைவாத ஈரானிய அரசியல்வாதி ஆவார். இவர் மே 2020 முதல் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருந்து வருகிறார்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் அவர் ஈரானிய தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். 

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லும் முன், அவர் நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் வரலாற்று ரீதியாகத் தோல்விகளுக்கும் உறுதிமொழி மீறல்களுக்கும் வழிவகுத்துள்ளன என்று இஸ்லாமாபாத் வந்தடைந்த பின்னர் அவர் கூறியதாக, அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1961-ல் பிறந்த காலிபாஃப், 1980-ல் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையில் (IRGC) சேர்ந்தார். ஈரான்-ஈராக் போரின்போது அதன் தளபதிகளில் ஒருவராகப் போரிட்டார்.

காலிபாஃப் தெஹ்ரானின் நீண்ட காலம் மேயராகப் பணியாற்றியவர் என்று அறியப்படுகிறார். அவர் 2005 முதல் 12 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். நகரின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக அவர் பாராட்டப்பட்டாலும், அவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் நான்கு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 2005-ல் நான்காவது இடத்தையும், 2013-ல் இரண்டாவது இடத்தையும் பிடித்தார். 2017-ல் தேர்தலுக்கு முன்பே தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற அவர் 2024-ல் நடந்த முன்கூட்டிய தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments