வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் - வைத்தியர் மலரவன் எச்சரிக்கை


நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக  பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். மலரவன் கோரியுள்ளார். 

யாழில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தற்போது நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் கடுமையான தாக்கம் ஏற்படும். அதனால் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் அவசியமற்று வெளியில் நடமாட வேண்டாம் 

அத்துடன் அதிக வெப்பத்தினால் நீர் சத்து அதிகம் தேவை என்பதால் சிறியவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை தேவைக்கேற்ப நீரினை பருக வேண்டும்.

தொப்பி அணிவது, அங்கீகரிக்கப்பட்ட கண்ணடிகளை அணிவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க  வேண்டும்.

கண்களை கசக்குவது, கைகளை சவுக்கரமிட்டு கழுவி பாதுகாப்பது, கைகளால் தேவையற்ற முறையில் கண்களை தொடுவது உள்ளிட்ட விடயங்களை தவிர்ப்பதன் ஊடாக இவ்வாறான நிலைமைகளிலிருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் 

 கண்கள் அதிகம் பாதிப்பு அடைந்தால் மாத்திரம் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களை நாட வேண்டும்.

கண் தொடர்பாக  மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார். 

No comments