ஹோர்முஸ் நீர்வழி திறந்து விடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு


போர்நிறுத்தக் காலம் முடியும் வரை ஹோர்முஸ் நீர்வழியை ஈரான் முழுமையாக மீண்டும் திறப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார் .

லெபனானில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழித்தடத்தில், போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் முழுவதும் ஹோர்முஸ் நீர் வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் செல்வதற்கு முழுமையாகத் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அராக்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments