ரஷ்ய எண்ணெயை மேலும் ஒருமாதம் வாங்கலாம் - அமெரிக்கா விலக்கை நீட்டித்தது
ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் கடல் வழியாக சுமார் ஒரு மாத காலத்திற்கு வாங்குவதற்கு அனுமதிக்கும் விலக்கை டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை புதுப்பித்தது.
பொருளாதாரத் துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட், தடைகள் தளர்வை நீட்டிக்கும் திட்டம் தமக்கு இல்லை என்று கூறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர், ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான ஒரு மாத கால விலக்கு அளிக்கப்பட்டது.

Post a Comment