இலங்கை : இருளினுள்?
இலங்கையின் மின்சார உற்பத்தி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் மின்சாரத்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்க்கப்பட்டுள்ளது.
நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் திறன் குறைவடைந்துள்ளதாலும், மத்திய கிழக்கு போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் கப்பல்கள் வருகை தாமதமாவதாலும், இரவு நேரங்களில் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் துண்டிக்கப்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கையிருப்பு, மின் உற்பத்தி இயந்திரங்களை முழுத் திறனுடன் இயக்குவதற்குப் போதுமானதாக இல்லை.மறுபுறம் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளமை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
முன்னதாக அத்தகைய இடைவெளியை நிரப்பப் பயன்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பும் தீர்ந்து வருகின்றது. அத்துடன், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ‘மர்பன்’ ரக கச்சா எண்ணெய் விநியோகமும் மத்திய கிழக்கு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் மின் உற்பத்திச் செலவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இரவு நேரங்களில் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் துண்டிக்கப்படலாம். எரிபொருள் கையிருப்பு மேலும் குறைந்தால், தினசரி மின்வெட்டு 3 முதல் 4 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment