கறுப்புக்கொடி:பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட களத்தில்!

 


யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

விசாரணை என்னும் பெயரில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஜனநாயக உரிமையை  கோரி  நாளை வியாழக்கிழமை விரிவுரைகளை புறக்கணித்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீடம் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது

கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்ற தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்தமையை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து யாழ் பல்கலைக்கழக முன்றலில் நாளை காலை 10 மணிக்கு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மாணவர்களிற்கு ஆதரவாக அனைத்து தரப்புகளையும்; போராட்டத்தில் கலந்து கொண்டு வலுசேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments