கேப்பாபிலவு:காணி தொடர்பில் பொய்யான அறிக்கை!



முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகள் தொடர்பில் பொய்யான தகவல்களை படைத்தரப்பு வழங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இராணுவ பயன்பாட்டிலுள்ள காணிகள் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக கேப்பாபிலவு காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், எஞ்சியவர்களுக்குப் பதிலீட்டு நிலம் மற்றும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதிக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு உடனடி எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இராணுவத்தினரால் வழங்கப்பட்டது தவறான தகவல் என்பதையும், இன்னும் 59 பேருக்குச் சொந்தமான 159.5 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசமுள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரபூர்வமான காணி விபரங்களை உள்ளடக்கி, ரவிகரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை மேற்கோள் காட்டி, ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பெருமளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பான விரிவான அறிக்கையொன்றை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


No comments