இலங்கையும் பரிதாபத்தில்!



 ஹார்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து தடை காரணமாக அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக  தெரியவந்துள்ளது.

ஹார்முஸ்  நீரிணை முழுமையாக மூடப்பட்டால், அது இலங்கைக்கு ஒரு பேரழிவுகரமான உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், உணவுப் பொருட்களின் விலை 15% க்கும் மேல் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் சாம்பியா (31%) உள்ளதுடன், தாய்வான் (12%), பாகிஸ்தான் (11%) மற்றும் இந்தியா (10%) ஆகிய நாடுகளின் பெயர்களும்  பாதிக்கப்படகூடிய நாடுகளின் பட்டியலில் உள்ளடங்குகின்றன.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மற்றும் உரங்களை இறக்குமதி செய்யும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள், இந்த உணவு விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments